தொடர்ந்து படிக்கread this section continuously
உண்டில்லை என்ற துருச்செய்து நின்றதுவண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்ததுகண்டிலர் காரண காரணி தம்மொடுமண்டல முன்றுற மன்னிநின் றாளே.
உரைmeaning
திரிபுரை சக்திக்கு உருவம் உண்டு என்று சொல்பவர்களுக்கு அவள் உருவமாக இருக்கிறாள். உருவம் இல்லை என்று சொல்பவர்களுக்கு அவள் அருவமாக இருக்கிறாள். தன்னைத் தியானித்தவர்களுக்கு அவர்கள் தியானித்த உருவமாகவே அவள் காட்சி கொடுக்கின்றாள். உலகத்தின் இயக்கத்திற்குக் காரணம் இறைவன், காரியம் இறைவி; இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அருவுருவமாகத் தில்லை அம்பலத்தில் எங்கும் நிறைந்து ஆடுகின்றார்கள். இந்த அருவுருவமே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் உய்ய வேண்டும் என்பதற்காகச் சூரிய, சந்திர, அக்னி ஆகிய மூன்று மண்டலங்களிலும் நிறைந்து திரிபுரை சக்தியாக நிற்கின்றாள்.
To those who say Tripurai Sakti has form, she is form. To those who say she has no form, she is the formless. To those who meditate on her, she shows herself in the very form they meditate upon. The Lord is the cause of the world's working, the Goddess is its carrying out; the two of them, joined as one, dance as the form of the formless, filling the ambalam at Thillai everywhere. This same form of the formless, so that all souls in the world may attain their good, fills and stands as Tripurai Sakti in all three spheres, the sun, the moon and the fire.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உருவம் உண்டு என்று சொல்பவர்களுக்கு அவள் உருவமாக இருக்கிறாள்; உருவம் இல்லை என்று சொல்பவர்களுக்கு அவள் அருவமாக இருக்கிறாள்; தன்னைத் தியானித்தவர்களுக்கு அவர்கள் தியானித்த உருவமாகவே அவள் காட்சி கொடுக்கின்றாள்.
To those who say she has form, she is form; to those who say she has no form, she is the formless; and to those who meditate on her, she shows herself in the very form they meditate upon.
- வரி 2Line 2
வளமான தில்லை அம்பலத்தினுள் அவள் எங்கும் நிறைந்து நிலைபெற்று இருக்கின்றாள்.
She fills and abides everywhere within the assembly hall at rich Thillai.
- வரி 3Line 3
காரணமாகிய இறைவனும் காரியமாகிய இறைவியும் ஒன்றாகச் சேர்ந்து அங்கே அருவுருவமாக ஆடுகின்றார்கள்; உணராதவர்கள் அதைக் காண்பதில்லை.
The Lord who is the cause and the Goddess who carries it out, joined together as one, dance there as the form of the formless, unseen by those who do not realize them.
- வரி 4Line 4
உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் உய்ய வேண்டும் என்பதற்காகச் சூரிய, சந்திர, அக்னி ஆகிய மூன்று மண்டலங்களிலும் நிறைந்து நிலைபெற்று நிற்கின்றாள்.
For all souls in the world to attain their good, she fills and stands abiding in all three spheres, the sun, the moon and the fire.
திருமந்திரம் பாடல் #1065





