தொடர்ந்து படிக்கread this section continuously
அளியொத்த பெண்பிள்ளை யானந்த சுந்தரிபுளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்தெளியுறு வித்துச் சிவகதி காட்டிஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.
உரைmeaning
பாடல் #1063 இல் உள்ளபடி நற்கதியை அருளுகின்ற திரிபுரை சக்தியான இறைவி பேரானந்தத்தின் வடிவமாகப் பேரழகுடன் இருக்கின்றாள். புளியம் பழத்தின் மேல்பகுதி கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் பழுத்த பழம் மென்மையாகவும் ஓடுடன் ஒட்டாமலும் இருப்பது போல, திரிபுரை சக்தி தனது அருள் பார்வையால் எமது உள்ளத்திற்குள் பார்த்து எம்மைத் தெளிய வைத்து, எமக்குள் ஒளியாக இருக்கும் இறைவனின் சிவகதியைக் காட்டி, எம்மை மேன்மை அடைய வைத்துத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
As in verse 1063, the Goddess who is Tripurai Sakti, granting a good end, is herself the form of supreme bliss, of great beauty. Just as the outer skin of the tamarind fruit is hard while the ripened fruit within it is soft and does not cling to the shell, Tripurai Sakti, with her gracious gaze, looked within our hearts and made us clear, showed us the Lord's Sivagati, the light present within us, raised us to that higher state, and drew us wholly into herself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
திரிபுரை சக்தியான இறைவி பேரானந்தத்தின் வடிவமாகப் பேரழகுடன் விளங்கும் இளம் பெண்ணாக இருக்கின்றாள்.
The Goddess who is Tripurai Sakti is herself the form of supreme bliss, a young girl of great beauty.
- வரி 2Line 2
புளியம் பழத்தின் மேல்பகுதி கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் பழுத்த பழம் மென்மையாகவும் ஓடுடன் ஒட்டாமலும் இருப்பது போல, அவள் எமது உள்ளத்திற்குள் பார்த்து,
Just as the outer skin of the tamarind fruit is hard while the ripened fruit within it is soft and does not cling to the shell, she looked within our hearts,
- வரி 3Line 3
எம்மைத் தெளிய வைத்து, எமக்குள் ஒளியாக இருக்கும் இறைவனின் சிவகதியைக் காட்டி,
made us clear, and showed us the Lord's Sivagati, the light present within us,
- வரி 4Line 4
எம்மை மேன்மை அடைய வைத்துத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
raised us to that higher state, and drew us wholly into herself.
திருமந்திரம் பாடல் #1064





