தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்ந்துட னேநிற்கு முள்ளொளி யாகிமணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.
உரைmeaning
பாடல் #1062 இல் உள்ளபடி திரிபுரையாக இருக்கும் மனோன்மணி சக்தியைத் தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் அவ்வழியிலேயே சாதகம் செய்யும் போது இறைவன் அவர்களுக்கு உள்ளிருந்து ஒளியாக வெளிப்படுவான். அந்த இறைவனோடு நறுமணம் கமழும் மலர்களைத் தன் கூந்தலில் அணிந்திருக்கும் இறைவியும் ஒன்றாகக் கலந்திருந்து வெளிப்படுவாள். அப்படி வெளிப்பட்ட திரிபுரை சக்தி காட்டும் வழியில் அன்போடு செல்பவர்களுக்கு அவள் நற்கதியை அருளுவாள்.
As in verse 1062, when those who have inquired into and understood the way to keep Manonmani Sakti, who is Tripurai, always within their thought take up spiritual practice along that very way, the Lord will reveal himself to them from within as light. Along with that Lord, the Goddess, who wears fragrant flowers in her hair, will also reveal herself, merged with him as one. And Tripurai Sakti, thus revealed, will grant a good end to those who walk with love along the path she shows.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மனோன்மணி சக்தியைத் தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் அவ்வழியிலேயே சாதகம் செய்யும்போது, இறைவன் அவர்களுக்கு உள்ளிருந்து ஒளியாக வெளிப்படுவான்.
When those who have inquired into and understood the way to keep Manonmani Sakti always within their thought take up spiritual practice along that very way, the Lord will reveal himself to them from within as light.
- வரி 2Line 2
அந்த இறைவனோடு, நறுமணம் கமழும் மலர்களைத் தன் கூந்தலில் அணிந்திருக்கும் இறைவியும் வெளிப்படுவாள்,
Along with that Lord, the Goddess, who wears fragrant flowers in her hair, will also reveal herself,
- வரி 3Line 3
அவனோடு ஒன்றாகக் கலந்தவளாய்.
merged with him as one.
- வரி 4Line 4
அப்படி வெளிப்பட்ட திரிபுரை சக்தி, தான் காட்டும் வழியில் அன்போடு செல்பவர்களுக்கு நற்கதியை அருளுவாள்.
And Tripurai Sakti, thus revealed, will grant a good end to those who walk with love along the path she shows.
திருமந்திரம் பாடல் #1063





