திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1062

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழைஅத்தகை செய்கின்ற ஆய பெரும்பதிமத்தடை கின்ற மனோன்மனி மங்கலிசித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

உரை

பாடல் #1061 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் ஒன்றாக அடைந்திருக்கும் மனோன்மணி சக்தியானவள், தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு, முடிவில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டே இருக்கின்றாள். அப்படி அவள் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மிகப்பெரும் தலைவனாகிய இறைவனோடு சேர்ந்து எப்போதும் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் மனோன்மணியானவள், தான் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் மங்கலமாக்குகின்றாள். இவளைத் தனது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமலே உயிர்கள் இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    எமது உள்ளத்திற்குள் ஒன்றாக அடைந்திருக்கும் மனோன்மணி சக்தியானவள், தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கின்றாள்.

  • வரி 2

    முடிவில்லாமல் அனைத்துச் செயல்களையும் அவள் செய்து கொண்டே இருக்கின்றாள்.

  • வரி 3

    அவள் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மிகப்பெரும் தலைவனாகிய இறைவனோடு சேர்ந்து எப்போதும் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் மனோன்மணியானவள், தான் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் மங்கலமாக்குகின்றாள்.

  • வரி 4

    இவளைத் தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமலே உயிர்கள் இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1062

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout