தொடர்ந்து படிக்கread this section continuously
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகைகலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து, அனைத்து உயிர்களுக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள். இந்தச் சக்தியானவள் என்றும் மாறாதவளாக, அனைத்துச் செயல்களையும் செய்வதற்குத் தேவையான ஞானத்தை அருளி, அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள். திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்திற்குள்ளே வைத்து நிலைநிறுத்தியதால், அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.
As in verse 1059, Sri Vidya Devi, the mistress, stands at the very peak of wisdom that is above all else, merges with the world, and grants the milk of wisdom that gives every soul knowledge equal and fitted to its own acts. This power, unchanging forever, grants the wisdom needed for every act and has attained success in it. Because I have set this Sri Vidya Devi, who is Tripurai Sakti, firmly within my heart, she now stands completely filling me within.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து, அனைத்து உயிர்களுக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள்.
As in verse 1059, Sri Vidya Devi, the mistress, stands at the very peak of wisdom that is above all else, merges with the world, and grants the milk of wisdom that gives every soul knowledge equal and fitted to its own acts.
- வரி 2Line 2
இந்தச் சக்தியானவள் என்றும் மாறாதவளாக, அனைத்துச் செயல்களையும் செய்வதற்குத் தேவையான ஞானத்தை அருளி, அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள்.
This power, unchanging forever, grants the wisdom needed for every act and has attained success in it.
- வரி 3Line 3
திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்திற்குள்ளே வைத்து நிலைநிறுத்தியதால்,
Because I have set this Sri Vidya Devi, who is Tripurai Sakti, firmly within my heart,
- வரி 4Line 4
அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.
she now stands completely filling me within.
திருமந்திரம் பாடல் #1060





