தொடர்ந்து படிக்கread this section continuously
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்பத்து முகமும் பரையும் பராபரைச்சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.
உரைmeaning
ஒவ்வொரு உயிரும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவற்றுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்திருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள். தானாகச் செயல்படும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக அசையாச் சக்தியான சதாசிவமூர்த்தியும், அதைச் செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள். இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா என்னும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.
In the many different births that each soul takes one after another, Tripurai Sakti, who stays joined with the Lord who is present within them as a substance concealed, protects them with ten faces. There stands the unmoving power, Sadashiva Murthi, the cause of every act that unfolds by itself, and there stands the moving power, Tripurai, the instrument that carries out that act. This same Tripurai Sakti, under the name Sri Vidya, is the mistress who grants to everything in the world the wisdom to carry out each thing's own proper acts.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒவ்வொரு உயிரும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவற்றுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்திருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள்.
In the many different births that each soul takes one after another, Tripurai Sakti, who stays joined with the Lord who is present within them as a substance concealed, protects them with ten faces.
- வரி 2Line 2
தானாகச் செயல்படும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக அசையாச் சக்தியான சதாசிவமூர்த்தியும், அதைச் செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள்.
There stands the unmoving power, Sadashiva Murthi, the cause of every act that unfolds by itself, and there stands the moving power, Tripurai, the instrument that carries out that act.
- வரி 3Line 3
இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா என்னும் பெயருடன்
This same Tripurai Sakti, under the name Sri Vidya,
- வரி 4Line 4
உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.
is the mistress who grants to everything in the world the wisdom to carry out each thing's own proper acts.
திருமந்திரம் பாடல் #1059





