தொடர்ந்து படிக்கread this section continuously
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையைவம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியைநம்பியென் னுள்ளே நயந்துவைத் தேனே.
உரைmeaning
பாடல் #1057 இல் உள்ளபடி ஞானத்தைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளைக் கொண்டவளும், மணம் கமழ்கின்ற வாசனை மலர்களைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பித் தேடுகின்றவளாக இருப்பவளும், பவளம் போன்ற சிகப்பான மேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய திரிபுரை சக்தி இராஜராஜேஸ்வரி என்னும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள். இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்தச் சக்தியே என்று நம்பி, எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.
Tripurai Sakti, who is like the branch that supports and grows wisdom, who has breasts that shine in complete beauty, who wears fragrant flowers in her hair, whom even the gods long for and seek out, and who is a young girl with a coral red body, grants her grace under the sacred name Rajarajeswari. Trusting that it is this power alone who can grant the wisdom that merges inseparably with the Lord, I have placed her within my heart with reverence.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானத்தைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளைக் கொண்டவளும்,
She who is like the branch that supports and grows wisdom, who has breasts that shine in complete beauty,
- வரி 2Line 2
மணம் கமழ்கின்ற வாசனை மலர்களைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பித் தேடுகின்றவளும்,
who wears fragrant flowers in her hair, whom even the gods long for and seek out,
- வரி 3Line 3
பவளம் போன்ற சிகப்பான திருமேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய இந்தத் திரிபுரை சக்தி, இராஜராஜேஸ்வரி என்னும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள்.
and who is a young girl with a coral red sacred body, this Tripurai Sakti grants her grace under the name Rajarajeswari.
- வரி 4Line 4
இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்தச் சக்தியே என்று நம்பி, எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.
Trusting that it is this power alone who can grant the wisdom that merges inseparably with the Lord, I have placed her within my heart with reverence.
திருமந்திரம் பாடல் #1058





