திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1056

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்உராசத்தி ஊழிகள் தோறும் உடனேபுராசத்தி புண்ணிய மாகிய போகமே.

உரை

பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக, பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அந்தந்தச் செயலுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள். பராசக்தியின் இந்தத் தன்மையை உயிர்கள் உணராமலே இருக்கின்றார்கள். இந்தப் பராசக்தியே யுகம் யுகமாகத் தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள். திரிபுரையாகிய இந்தப் பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக, பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அந்தந்தச் செயலுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள்.

  • வரி 2

    பராசக்தியின் இந்தத் தன்மையை உயிர்கள் உணராமலே இருக்கின்றார்கள்.

  • வரி 3

    இந்தப் பராசக்தியே யுகம் யுகமாகத் தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள்.

  • வரி 4

    திரிபுரையாகிய இந்தப் பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.

திருமந்திரம் பாடல் #1056

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout