தொடர்ந்து படிக்கread this section continuously
தானெங் குளனங் குளதையன் மாதேவிஊனெங் குளவங் குளவுயிர்க் காவலன்வானெங் குளவங் குளமந்த மாருதங்கோனெங்கு நின்ற குறிபல பாரே.
உரைmeaning
இறைவன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெங்கெல்லாம் மாபெரும் தேவியாகிய இறைவியும் இறைவனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றாள். உலகத்தில் உடலாக இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்திற்குள்ளும் உயிராக நின்று இறைவனும் இறைவியும் பாதுகாக்கின்றார்கள். உலகத்தில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மென்மையான தென்றல் காற்றாக இறைவனும் இறைவியும் இருக்கின்றார்கள். அனைத்தையும் ஆளுகின்ற இறைவனும் இறைவியும் எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பலவிதமான குறிப்புகளால் நீங்களே கண்டு கொள்ளுங்கள்.
Wherever the Lord is present, there the great Goddess too is present, interwoven with him. Within all things in the world, both the moving and the unmoving, that stand as body, the Lord and Goddess together stand as the life within and give protection. In every empty space in the world they stand together as the gentle southern breeze. Find out for yourselves, through many kinds of signs, where and how the Lord and Goddess, who rule over everything, are present.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெங்கெல்லாம் மாபெரும் தேவியாகிய இறைவியும் இறைவனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றாள்.
Wherever the Lord is present, there the great Goddess too is present, interwoven with him.
- வரி 2Line 2
உலகத்தில் உடலாக இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்திற்குள்ளும் உயிராக நின்று இறைவனும் இறைவியும் பாதுகாக்கின்றார்கள்.
Within all things in the world, both the moving and the unmoving, that stand as body, the Lord and Goddess together stand as the life within and give protection.
- வரி 3Line 3
உலகத்தில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மென்மையான தென்றல் காற்றாக இறைவனும் இறைவியும் இருக்கின்றார்கள்.
In every empty space in the world they stand together as the gentle southern breeze.
- வரி 4Line 4
அனைத்தையும் ஆளுகின்ற இறைவனும் இறைவியும் எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பலவிதமான குறிப்புகளால் நீங்களே கண்டு கொள்ளுங்கள்.
Find out for yourselves, through many kinds of signs, where and how the Lord and Goddess, who rule over everything, are present.
திருமந்திரம் பாடல் #1055





