தொடர்ந்து படிக்கread this section continuously
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்அறிவார் பரனும் அவளிடத் தானே.
உரைmeaning
ஞானத்தின் மொத்த உருவமாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தமக்கு உண்மை ஞானத்தை வழங்க வல்லவள் என்று அறிந்தவர்கள், பராசக்தி என்னும் பெயருடைய அவளே பேரானந்தத்தின் உருவமாக இருப்பதையும், உருவம் அருவம் அருவுருவம் ஆகிய அனைத்துமாக இருப்பதையும், அனைத்தையும் தன் இச்சைப்படி ஆட்டி வைப்பதையும், இறைவனின் சரிபாதியாக இருப்பதையும் அறிவார்கள். (உருவம் என்பது கண்ணால் காணக்கூடிய ரூபம், உதாரணமாக சிவபெருமான்; அருவம் என்பது உணரக்கூடிய நுட்பமான தன்மை, உதாரணமாக சக்தி; அருவுருவம் என்பது அந்த நுட்பத்தின் ரூப வடிவம், உதாரணமாக சிவலிங்கம்.)
Those who know that Tripurai Sakti, the whole form of wisdom, is able to grant them true knowledge, come to know that she, under the name Parasakti, is herself the form of supreme bliss; that she is form, the formless, and the form of the formless, all three together; that she sets everything in motion according to her own will; and that she is the equal half of the Lord. (Form means the shape one can see, as with Shiva; the formless means the subtle nature one can only sense, as with Sakti; and the form of the formless means that subtlety taking a shape, as with the Shiva Linga.)
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஞானத்தின் மொத்த உருவமாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தமக்கு உண்மை ஞானத்தை வழங்க வல்லவள் என்று அறிந்தவர்கள், பராசக்தி என்னும் பெயருடைய அவளே பேரானந்தத்தின் உருவமாக இருப்பதை அறிவார்கள்.
Those who know that Tripurai Sakti, the whole form of wisdom, is able to grant them true knowledge, come to know that she, under the name Parasakti, is herself the form of supreme bliss.
- வரி 2Line 2
உருவம் அருவம் அருவுருவம் ஆகிய அனைத்துமாக அவளே இருப்பதை அறிவார்கள். (உருவம் கண்ணால் காணக்கூடிய ரூபம், உதாரணம் சிவபெருமான்; அருவம் உணரக்கூடிய நுட்பமான தன்மை, உதாரணம் சக்தி; அருவுருவம் அந்த நுட்பத்தின் ரூப வடிவம், உதாரணம் சிவலிங்கம்.)
They know that she is form, the formless, and the form of the formless, all three together. (Form is the shape one can see, as with Shiva; the formless is the subtle nature one can only sense, as with Sakti; and the form of the formless is that subtlety taking a shape, as with the Shiva Linga.)
- வரி 3Line 3
அனைத்தையும் தன் இச்சைப்படி ஆட்டி வைப்பதை அறிவார்கள்.
They know that she sets everything in motion according to her own will.
- வரி 4Line 4
இறைவனின் சரிபாதியாக அவளே இருப்பதை அறிவார்கள்.
They know that she is the equal half of the Lord.
திருமந்திரம் பாடல் #1054





