தொடர்ந்து படிக்கread this section continuously
அவளை அறியா அமரரும் இல்லைஅவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லைஅவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
உரைmeaning
திரிபுரை சக்தியைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. திரிபுரை சக்தியை நோக்கிச் செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. திரிபுரை சக்தியின் அருள் இல்லாமல் படைத்தல், மறைத்தல், காத்தல், அருளல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. திரிபுரை சக்தியில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியேன்.
There are no immortals free of birth and death apart from Tripurai Sakti. There is no austerity finer than austerity turned toward Tripurai Sakti. Without her grace, the gods who carry out the acts of creation, concealment, protection, granting and destruction can do nothing at all. And I know of no other way to reach liberation without Tripurai Sakti.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அவளை அறியா அமரரும் இல்லை.
There are no immortals free of birth and death apart from Tripurai Sakti.
- வரி 2Line 2
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை.
There is no austerity finer than austerity turned toward her.
- வரி 3Line 3
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை.
Without her grace, the gods who carry out the five acts of creation, concealment, protection, granting and destruction can do nothing at all.
- வரி 4Line 4
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
And I know of no other way to reach liberation without her.
திருமந்திரம் பாடல் #1053





