தொடர்ந்து படிக்கread this section continuously
சுத்தவம் பாரத் தளித்த சுகோதயள்வத்துவ மாயா ளுமாசத்தி மாபரைஅத்தகை யான மனோரணி தானுமாய்வைத்தவக் கோல மதியவ ளாகுமே.
உரைmeaning
பாடல் #1051 இல் உள்ளபடி தூய்மையும் அனைத்து ஞானத்தின் மொத்த உருவமும் ஆகிய திரிபுரை சக்தி கருணையோடு பேரின்பத்தை அளிப்பவள். அவளே அனைத்தையும் இயக்குகின்ற மெய்ப்பொருளாகிய உமா சக்தி என்னும் பெயருடைய மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். அத்தகைய மாபெரும் சக்தி அணுவுக்குள் அணுவைப் போல நுண்ணியதாகவும் இருக்கின்றாள். இப்படி இருக்கும் இவளது திருக்கோலமே ஞானத்தின் முழு உருவமாகும்.
As in verse 1051, Tripurai Sakti, who is pure and is the whole form of all wisdom, grants supreme bliss with compassion. She is the great power named Uma Sakti, the true substance that sets everything in motion. That great power is also as subtle as an atom within an atom. Her sacred form, being thus, is itself the whole form of wisdom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1051 இல் உள்ளபடி தூய்மையும் அனைத்து ஞானத்தின் மொத்த உருவமும் ஆகிய திரிபுரை சக்தி கருணையோடு பேரின்பத்தை அளிப்பவள்.
As in verse 1051, Tripurai Sakti, who is pure and is the whole form of all wisdom, grants supreme bliss with compassion.
- வரி 2Line 2
அவளே அனைத்தையும் இயக்குகின்ற மெய்ப்பொருளாகிய உமா சக்தி என்னும் பெயருடைய மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.
She is the great power named Uma Sakti, the true substance that sets everything in motion.
- வரி 3Line 3
அத்தகைய மாபெரும் சக்தி அணுவுக்குள் அணுவைப் போல நுண்ணியதாகவும் இருக்கின்றாள்.
That great power is also as subtle as an atom within an atom.
- வரி 4Line 4
இப்படி இருக்கும் இவளது திருக்கோலமே ஞானத்தின் முழு உருவமாகும்.
Her sacred form, being thus, is itself the whole form of wisdom.
திருமந்திரம் பாடல் #1052





