தொடர்ந்து படிக்கread this section continuously
நின்ற திரிபுரை நீளும் புராதனிகுன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகைநன்றறி கண்டிகை நாற்காற் கரீடணிதுன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
உரைmeaning
பாடல் 1050 இல் உள்ளபடி, நான்கு திசைகளையும் தாங்கி நிற்கும் திரிபுரை சக்தி, ஆதியிலிருந்தே தொடர்ந்து இருக்கும் பராசக்தி ஆவாள். இவள் குறையில்லாத அழகுடன் அண்டசராசரங்கள் அனைத்தையும் வசப்படுத்தி வைத்திருப்பவள்; மிகவும் அழகாக அசைந்தாடும் தலைமுடியைக் கொண்டவள்; நன்மையை வழங்கும் உருத்திராட்சத்தை அணிந்தவள். நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானையை வாகனமாகக் கொண்டவள். இவள் சுத்தமாக மலராமல் நெருங்கியிருக்கும் தாமரை இதழ்களைப் போலத் தூய்மையானவள்.
As in verse 1050, Tripurai, who stands bearing all four directions, is the Supreme Power that has endured continuously since the beginning. She holds the whole of creation subject to her flawless beauty; she has hair that sways most beautifully; she wears the beneficial rudraksha. She has as her mount an elephant with four legs and a dark form. She is as pure as the tightly closed petals of a lotus that has not yet opened.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1050 இல் உள்ளபடி, நான்கு திசைகளையும் தாங்கி நிற்கும் திரிபுரை சக்தி, ஆதியிலிருந்தே தொடர்ந்து இருக்கும் பராசக்தி ஆவாள். இவள் குறையில்லாத அழகுடன் அண்டசராசரங்கள் அனைத்தையும் வசப்படுத்தி வைத்திருப்பவள்;
As in verse 1050, Tripurai, who stands bearing all four directions, is the Supreme Power that has endured continuously since the beginning. She holds the whole of creation subject to her flawless beauty;
- வரி 2Line 2
மிகவும் அழகாக அசைந்தாடும் தலைமுடியைக் கொண்டவள்;
she has hair that sways most beautifully;
- வரி 3Line 3
நன்மையை வழங்கும் உருத்திராட்சத்தை அணிந்தவள். நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானையை வாகனமாகக் கொண்டவள்.
she wears the beneficial rudraksha. She has as her mount an elephant with four legs and a dark form.
- வரி 4Line 4
இவள் சுத்தமாக மலராமல் நெருங்கியிருக்கும் தாமரை இதழ்களைப் போலத் தூய்மையானவள்.
She is as pure as the tightly closed petals of a lotus that has not yet opened.
திருமந்திரம் பாடல் #1051





