திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1050

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

உரை

பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும், வில்லைப் போன்ற வளைந்த புருவங்களும், அரக்கு நிறத்தில் இருக்கும் திருமேனியும், சிவமணி மாலையை ஆரமாகவும், தலையில் ஒளிர்விடும் நிலவைக் கிரீடமாகவும் கொண்டு, சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி நிற்பவளே திரிபுரை சக்தி.

வரி வாரியாக

  • வரி 1

    பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும், வில்லைப் போன்ற வளைந்த புருவங்களும்,

  • வரி 2

    அரக்கு நிறத்தில் இருக்கும் திருமேனியும்,

  • வரி 3

    சிவமணி மாலையை ஆரமாகவும், தலையில் ஒளிர்விடும் நிலவைக் கிரீடமாகவும் கொண்டு,

  • வரி 4

    சண்டிகை எனும் பெயருடன் நான்கு திசைகளையும் தாங்கி நிற்பவளே திரிபுரை சக்தி.

திருமந்திரம் பாடல் #1050

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout