தொடர்ந்து படிக்கread this section continuously
தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடைவாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்ஏரணி யங்குச பாச மெழில்முடிகாரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
உரைmeaning
அழகிய சிலம்பு அணிந்த திருவடிகளும், சிவந்த பட்டு அணிந்த உடலும், அழகிய கச்சை அணிந்த மார்பும், அம்பைப் போன்ற மலர்க்கொத்தும், வில்லைப் போன்ற கரும்பும் அணிந்த கரங்களும், அங்குசமும் பாசக் கயிறும் அணிந்த நான்கு கரங்களும், அழகிய நீண்ட கருமையான கூந்தலும், பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும் கொண்ட உருவமாகத் திரிபுரை இருக்கிறாள்.
Beautiful anklet-adorned sacred feet, and a body clothed in red silk, a breast wearing a lovely girdle, and arms bearing a flower cluster like an arrow and a bow-like stalk of sugarcane, the four arms also bearing a goad and a noose cord, and long, beautiful dark hair, and ears wearing earrings set with large gems: in such a form Tripurai stands.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அழகிய சிலம்பு அணிந்த திருவடிகளும், சிவந்த பட்டு அணிந்த உடலும்,
Beautiful anklet-adorned sacred feet, and a body clothed in red silk,
- வரி 2Line 2
அழகிய கச்சை அணிந்த மார்பும், அம்பைப் போன்ற மலர்க்கொத்தும், வில்லைப் போன்ற கரும்பும் அணிந்த கரங்களும்,
a breast wearing a lovely girdle, and arms bearing a flower cluster like an arrow and a bow-like stalk of sugarcane,
- வரி 3Line 3
அங்குசமும் பாசக் கயிறும் அணிந்த நான்கு கரங்களும், அழகிய நீண்ட கருமையான கூந்தலும்,
the four arms also bearing a goad and a noose cord, and long, beautiful dark hair,
- வரி 4Line 4
பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும் கொண்ட உருவமாகத் திரிபுரை இருக்கிறாள்.
and ears wearing earrings set with large gems: in such a form Tripurai stands.
திருமந்திரம் பாடல் #1049





