தொடர்ந்து படிக்கread this section continuously
நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்பல்கும் பரவிந்து பாரண்ட மானவைநல்கும் பரைஅபி ராமி அகோசரிபுல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.
உரைmeaning
பாடல் 1047 இல் உள்ளபடி, அருளுகின்ற திரிபுரை சக்தி ஒலியாகவும், அந்த ஒலியின் எல்லையாகவும் இருக்கிறாள். திரிபுரையே உணரமுடியாத பேரொளியாகவும் இருந்து, உலகங்கள் அண்டசராசரங்கள் அனைத்திற்கும் பரவிப் பெருகுகிறாள். இந்த ஒலியும் ஒளியுமான திரிபுரையே, அனைத்தையும் அருளுபவளாகவும், பேரழகு மிகுந்தவளாகவும், உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாகவும் இருந்து, அன்போடு ஞானத்தை அருளி ஆட்கொள்கிறாள். பரை எனும் அசையும் சக்தியும், பேரழகு மிகுந்த அபிராமியும், ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்ட அகோசரியும் ஆகிய இம்மூன்று சக்தி வடிவங்களுமே திரிபுரை என இப்பாடலின் கருத்து கூறுகிறது.
As in verse 1047, Tripurai, the power that grants, exists as sound and as the boundary of that sound. Tripurai herself, as a great radiance beyond perception, spreads and grows to fill all the worlds and the whole of creation. This Tripurai, who is thus sound and light, grants everything, is filled with great beauty, is beyond the senses, and lovingly grants wisdom and takes possession of her devotees. This verse's gist is that these three forms of power, Parai, the power that stirs, Abhirami, filled with great beauty, and Agosari, beyond the five sheaths, are all Tripurai.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் 1047 இல் உள்ளபடி, அருளுகின்ற திரிபுரை சக்தி ஒலியாகவும், அந்த ஒலியின் எல்லையாகவும் இருக்கிறாள்.
As in verse 1047, Tripurai, the power that grants, exists as sound and as the boundary of that sound.
- வரி 2Line 2
திரிபுரையே உணரமுடியாத பேரொளியாகவும் இருந்து, உலகங்கள் அண்டசராசரங்கள் அனைத்திற்கும் பரவிப் பெருகுகிறாள்.
Tripurai herself, as a great radiance beyond perception, spreads and grows to fill all the worlds and the whole of creation.
- வரி 3Line 3
இந்த ஒலியும் ஒளியுமான திரிபுரையே, அனைத்தையும் அருளுபவளாகவும், பேரழகு மிகுந்தவளாகவும், உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாகவும் இருந்து, அன்போடு ஞானத்தை அருளி ஆட்கொள்கிறாள்.
This Tripurai, who is thus sound and light, grants everything, is filled with great beauty, is beyond the senses, and lovingly grants wisdom and takes possession of her devotees.
- வரி 4Line 4
பரை எனும் அசையும் சக்தியும், பேரழகு மிகுந்த அபிராமியும், ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்ட அகோசரியும் ஆகிய இம்மூன்று சக்தி வடிவங்களுமே திரிபுரை என இப்பாடலின் கருத்து கூறுகிறது.
This verse's gist is that these three forms of power, Parai, the power that stirs, Abhirami, filled with great beauty, and Agosari, beyond the five sheaths, are all Tripurai.
திருமந்திரம் பாடல் #1048





