திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1047

நான்காம் தந்திரம்5. சக்தி பேதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானா யமைந்தவ முப்புரம் தன்னிடைத்தானான மூவுரு வோருருத் தன்மையள்தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்விதானான போகமும் முத்தியும் நல்குமே.

உரை

திரிபுரை சக்தி, மூன்று புரங்களில் இருக்கும் தேவர்களுக்கும் அவரவர் தன்மைக்கேற்ற உருவங்களைக் கொண்ட தேவியர்களாகத் தாமாகவே அமைந்திருக்கிறாள். இந்தச் சக்தியே பொன்நிறம் கொண்டவளாக இருந்து போகத்தையும், வெண்நிறம் கொண்டவளாக இருந்து ஞானத்தையும், செம்மையான கருமை நிறம் கொண்டவளாக இருந்து மாயையை அழித்து முக்தியையும் அருளும் சக்தியாக இருக்கிறாள்.

வரி வாரியாக

  • வரி 1

    திரிபுரை சக்தி, மூன்று புரங்களில் இருக்கும் தேவர்களுக்கும்

  • வரி 2

    அவரவர் தன்மைக்கேற்ற உருவங்களைக் கொண்ட தேவியர்களாகத் தாமாகவே அமைந்திருக்கிறாள்.

  • வரி 3

    இந்தச் சக்தியே பொன்நிறம் கொண்டவளாக இருந்து போகத்தையும், வெண்நிறம் கொண்டவளாக இருந்து ஞானத்தையும்,

  • வரி 4

    செம்மையான கருமை நிறம் கொண்டவளாக இருந்து மாயையை அழித்து முக்தியையும் அருளும் சக்தியாக இருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1047

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout