தொடர்ந்து படிக்கread this section continuously
தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்காராருங் கண்ணி கடைஞான முட்பெய்துஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்பாரா ருலகமும் பகன்முன்ன தாமே.
உரைmeaning
முந்தைய பாடலில் உள்ளபடி, அண்டசராசரங்கள் அனைத்திலும் கலந்திருக்கும் இறைசக்தியைத் தமக்குள் கலந்திருக்கும் பஞ்சபூதங்களாகக் கண்டு தரிசிக்க முடிந்த யோகியர், ஞானக் கண்ணைப் பெற்று, தமக்குள் இருக்கும் அந்த இறைசக்தியைத் தீபத்தில் ஏற்றி வைத்த சுடர் போல ஒளி உருவமாகக் கண்டு தரிசித்து, தமது எண்ணங்களை அதன்மேலேயே வைத்துத் தியானித்திருந்தால், அண்டசராசரங்கள் அனைத்தையும், தாம் அமர்ந்த இடத்திலிருந்தே, முழு சூரிய வெளிச்சத்தில் காணும் பகல் காட்சி போலத் தெள்ளத் தெளிவாகக் காணலாம் என்கிறது பாடல்.
As in the previous verse, the yogis who come to see and behold the divine power pervading the whole universe as the five elements contained within them gain the eye of wisdom. If they behold that same divine power within themselves as a form of light, like a flame lit in a lamp, and hold their thoughts fixed upon it in meditation, then, the verse says, they can see the whole universe, right from where they sit, with the same clear brightness as a daylight scene seen in the full light of the sun.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முந்தைய பாடலில் உள்ளபடி, அண்டசராசரங்கள் அனைத்திலும் கலந்திருக்கும் இறைசக்தியைத் தமக்குள் கலந்திருக்கும் பஞ்சபூதங்களாகக் கண்டு தரிசிக்க முடிந்த யோகியர் ஞானக் கண்ணைப் பெறுவர்.
As in the previous verse, the yogis who come to see and behold the divine power pervading the whole universe as the five elements contained within them gain the eye of wisdom.
- வரி 2Line 2
தமக்குள் இருக்கும் அந்த இறைசக்தியைத் தீபத்தில் ஏற்றி வைத்த சுடர் போல ஒளி உருவமாகக் கண்டு தரிசித்து,
If they behold that same divine power within themselves as a form of light, like a flame lit in a lamp,
- வரி 3Line 3
தமது எண்ணங்களை அதன்மேலேயே வைத்துத் தியானித்திருந்தால்,
and hold their thoughts fixed upon it in meditation,
- வரி 4Line 4
அண்டசராசரங்கள் அனைத்தையும் தாம் அமர்ந்த இடத்திலிருந்தே முழு சூரிய வெளிச்சத்தில் காணும் பகல் காட்சி போலத் தெள்ளத் தெளிவாகக் காணலாம் என்கிறது பாடல்.
then, the verse says, they can see the whole universe, right from where they sit, with the same clear brightness as a daylight scene seen in the full light of the sun.
திருமந்திரம் பாடல் #823





