தொடர்ந்து படிக்கread this section continuously
முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழேபன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்தன்னெழு கோயில் தலைவனு மாமே.
உரைmeaning
உடலில் தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு விரல் அளவில், வேதத்தில் கூறியதுபோல் பகல்போன்ற ஒளி உள்ளது. கேசரி யோகத்தின் மூலம், அந்த ஒளிப்பிழம்பிலிருந்து வெளிப்பட்டு எழும் நாதத்தை இடைவிடாது சிந்தித்தால், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக இந்த உடல் அமையும் என்கிறது பாடல்.
Twelve finger-widths below the navel in the body, there is a light like daylight, as the Vedas declare. If, through kesari yoga, one thinks without pause upon the sacred sound that rises forth from that mass of light, the verse says this very body becomes the sacred temple where Sivan comes to dwell.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உடலில் தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு விரல் அளவில், வேதத்தில் கூறியதுபோல் பகல்போன்ற ஒளி உள்ளது.
Twelve finger-widths below the navel in the body, there is a light like daylight, as the Vedas declare.
- வரி 2Line 2
கேசரி யோகத்தின் மூலம், அந்த ஒளிப்பிழம்பிலிருந்து வெளிப்பட்டு எழும் நாதத்தை,
If, through kesari yoga, the sacred sound that rises forth from that mass of light
- வரி 3Line 3
இடைவிடாது சிந்தித்தால்,
is thought upon without pause,
- வரி 4Line 4
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக இந்த உடல் அமையும் என்கிறது பாடல்.
the verse says this very body becomes the sacred temple where Sivan comes to dwell.
திருமந்திரம் பாடல் #824





