திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 821

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னிநலங்கிடும் கண்டத்து நாபியி னுள்ளேவணங்கிடு மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.

உரை

மூச்சுக்காற்றை மேல்நோக்கிச் செலுத்தி, யோகத்தில் எண்ணங்களை நெற்றிக்கு நடுவில் வைத்து அமர்ந்திருந்தால், தலை உச்சியிலிருந்து சுரக்கும் அமிர்தம் அடிவயிற்றுக்குச் சென்று பொசுங்கிப் போகாமல், நெற்றியிலேயே நிலைத்து நிற்கும். அப்படி அமிர்தம் நிலைத்தால் கிடைக்கும் பெரும் பயன்களைச் சொல்லவும் முடியாது என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    மூச்சுக்காற்றை மேல்நோக்கிச் செலுத்தி,

  • வரி 2

    யோகத்தில் எண்ணங்களை நெற்றிக்கு நடுவில் வைத்து அமர்ந்திருந்தால்,

  • வரி 3

    தலை உச்சியிலிருந்து சுரக்கும் அமிர்தம் அடிவயிற்றுக்குச் சென்று பொசுங்கிப் போகாமல், நெற்றியிலேயே நிலைத்து நிற்கும்.

  • வரி 4

    அப்படி அமிர்தம் நிலைத்தால் கிடைக்கும் பெரும் பயன்களைச் சொல்லவும் முடியாது என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #821

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout