தொடர்ந்து படிக்கread this section continuously
பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்கொழுந்தது வாகுங் குணமது தானே.
உரைmeaning
திருவருளால் உடம்பில் உள்ள வெண்நிற அமிர்தம், பொன்நிறமான மண் போன்ற அடிப்பகுதியில் சேர்ந்தால், அங்குப் பெருகி வழிந்து நிறைந்திருந்து உடம்புக்கு உறுதி தரும். ஐம்பூதங்களால் ஆன உடம்பில் கழிவுகள் ஏற்படாது. இப்படி உடலைக் காக்க வல்லவர்களுக்கு உடல் இளமையுடன், கொழுந்து போல என்றும் பொலிவுடன் இருக்கும் என்கிறது பாடல்.
By divine grace, if the white nectar within the body joins that golden earth-like base, it wells up, flows, and fills that place, giving firmness to the body. In this body made of the five elements, there will be no wasting away. And for those able to guard the body this way, the verse says, it stays forever radiant with youth, like a fresh green shoot.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
திருவருளால் உடம்பில் உள்ள வெண்நிற அமிர்தம், பொன்நிறமான மண் போன்ற அடிப்பகுதியில் சேர்ந்தால்,
By divine grace, if the white nectar within the body joins that golden earth-like base,
- வரி 2Line 2
அங்குப் பெருகி வழிந்து நிறைந்திருந்து உடம்புக்கு உறுதி தரும்.
it wells up, flows, and fills that place, giving firmness to the body.
- வரி 3Line 3
ஐம்பூதங்களால் ஆன உடம்பில் கழிவுகள் ஏற்படாது.
In this body made of the five elements, there will be no wasting away.
- வரி 4Line 4
இப்படி உடலைக் காக்க வல்லவர்களுக்கு உடல் இளமையுடன், கொழுந்து போல என்றும் பொலிவுடன் இருக்கும் என்கிறது பாடல்.
And for those able to guard the body this way, the verse says, it stays forever radiant with youth, like a fresh green shoot.
திருமந்திரம் பாடல் #815





