தொடர்ந்து படிக்கread this section continuously
மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்கதிமனை யுள்ளே கணைகள் பரப்பிஎதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
உரைmeaning
சந்திரனிலிருந்து வரும் கதிர்கள் பதினாறு. அதுபோல அந்த இடத்திலிருந்து வரும் கதிர்களும் பதினாறாய் இருந்தும், உடலின் அந்தந்த இடங்களின் அதிபதியாய் இருநூற்றி இருபத்து நான்கு கதிர்களாய் இருந்தும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகளாகிய பகைவர்களை அவ்யோகியர் எதிர்சென்று போர் புரியாதவாறு, தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்துகொண்டு இருக்கின்றான் என்கிறது பாடல்.
The rays that come from the moon are sixteen. Likewise, the rays that come from that place are also sixteen, and, as the ruler over each of the body's own places, two hundred and twenty four rays. Within the body, that dwelling in motion, so that the yogi need not go forth and do battle with the foes that are his own deeds, the verse says the Lord keeps raining down the arrows that are his gracious power.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சந்திரனிலிருந்து வரும் கதிர்கள் பதினாறு; அதுபோல அந்த இடத்திலிருந்து வரும் கதிர்களும் பதினாறாய் இருந்தும்,
The rays that come from the moon are sixteen; likewise, the rays that come from that place are also sixteen,
- வரி 2Line 2
உடலின் அந்தந்த இடங்களின் அதிபதியாய் இருநூற்றி இருபத்து நான்கு கதிர்களாய் இருந்தும்,
and, as the ruler over each of the body's own places, two hundred and twenty four rays,
- வரி 3Line 3
இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகளாகிய பகைவர்களை அவ்யோகியர் எதிர்சென்று போர் புரியாதவாறு,
within the body, that dwelling in motion, so that the yogi need not go forth and do battle with the foes that are his own deeds,
- வரி 4Line 4
தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்துகொண்டு இருக்கின்றான் என்கிறது பாடல்.
the verse says the Lord keeps raining down the arrows that are his gracious power.
திருமந்திரம் பாடல் #813





