திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 812

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.

உரை

தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும், அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான். தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படையாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும், அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான். தன்னை மனத்தளவில் பாவனை செய்து தியானிக்கின்றவர்கட்கு, அப்பாவனையிலேயே இறைவன் விளங்குகின்றான். யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு, அவர்களுடைய உணர்வு வடிவமாகவே இறைவன் நிற்கின்றான் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும், அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான்.

  • வரி 2

    தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படையாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும், அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான்.

  • வரி 3

    தன்னை மனத்தளவில் பாவனை செய்து தியானிக்கின்றவர்கட்கு, அப்பாவனையிலேயே இறைவன் விளங்குகின்றான்.

  • வரி 4

    யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு, அவர்களுடைய உணர்வு வடிவமாகவே இறைவன் நிற்கின்றான் என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #812

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout