திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 811

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.

உரை

உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு சிவபெருமானுடன் குடியிருந்து வாழ்பவர், எல்லா உலகங்களுக்கும் திருவருள் செய்வதில் தாயை விடவும் நல்லவராவர். பிறர் இவர்மீது கோபம் கொண்டாலும் இவர் நன்மையே செய்வார். தீவினையாளர்களின் தீவினைத் துன்பம் நீங்க, நோய்க்கு மருந்து கொடுப்பது போல் அவர்களுக்குத் துன்பம் கொடுத்து, தீயை விடவும் கொடியராவர் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு சிவபெருமானுடன் குடியிருந்து வாழ்பவர்,

  • வரி 2

    எல்லா உலகங்களுக்கும் திருவருள் செய்வதில் தாயை விடவும் நல்லவராவர்.

  • வரி 3

    பிறர் இவர்மீது கோபம் கொண்டாலும் இவர் நன்மையே செய்வார்.

  • வரி 4

    தீவினையாளர்களின் துன்பம் நீங்க, நோய்க்கு மருந்து கொடுப்பது போல் அவர்களுக்குத் துன்பம் கொடுத்து, தீயை விடவும் கொடியராவர் என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #811

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout