தொடர்ந்து படிக்கread this section continuously
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்நாவினை நாடின் நமனுக் கிடமில்லைபாவினை நாடிப் பயனறக் கண்டவர்தேவினை யாடிய தீங்கரும் பாமே.
உரைmeaning
பாவச் செயல்களால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தீவினைகள் நம்மை வருத்தும்போது, அதைப் போக்கும் வழி தெரியாமல் இருப்பவர்கள், நாவின் பயிற்சியாகிய கேசரி யோகத்தைப் பயின்றால் எமனை வென்றுவிடலாம். பரந்த வினைகளை எல்லாம் ஆராய்ந்து, அவற்றால் விளையும் பயன் ஒன்றும் இல்லை என நன்கு அறிந்தவர்கள் தெய்வப் பணியில் ஈடுபட்டு, கிடைக்கும் திருவருளை இனிய கரும்பு சுவைப்பது போல் சுவைப்பர் என்கிறது பாடல்.
When evil deeds subject us to birth and death, and evil karma torments us, those who do not know the way to remove it can conquer Yama if they practice kesari yoga, the practice of the tongue. And those who examine every wide-ranging deed and come to know well that no benefit at all comes of them take up service to the divine instead, and savor the sweetness of the grace they receive there, the verse says, like tasting sweet sugarcane.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாவச் செயல்களால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தீவினைகள் நம்மை வருத்தும்போது,
When evil deeds subject us to birth and death, and evil karma torments us,
- வரி 2Line 2
அதைப் போக்கும் வழி தெரியாமல் இருப்பவர்கள் நாவின் பயிற்சியாகிய கேசரி யோகத்தைப் பயின்றால் எமனை வென்றுவிடலாம்.
those who do not know the way to remove it can conquer Yama if they practice kesari yoga, the practice of the tongue.
- வரி 3Line 3
பரந்த வினைகளை எல்லாம் ஆராய்ந்து, அவற்றால் விளையும் பயன் ஒன்றும் இல்லை என நன்கு அறிந்தவர்கள் தெய்வப் பணியில் ஈடுபடுவர்.
And those who examine every wide-ranging deed and come to know well that no benefit at all comes of them take up service to the divine instead.
- வரி 4Line 4
கிடைக்கும் திருவருளை இனிய கரும்பு சுவைப்பது போல் சுவைப்பர் என்கிறது பாடல்.
and savor the sweetness of the grace they receive there, the verse says, like tasting sweet sugarcane.
திருமந்திரம் பாடல் #807





