திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 804

மூன்றாம் தந்திரம்18. கேசரி யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்வானூறல் பாயும் வகையறி வாரில்லைவானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்தேனூறல் உண்டு தெளியலு மாமே.

உரை

உடலாகிய ஊனின் நெற்றி நடுவில் ஓர் ஒளி உள்ளது. அதைத் தலை உச்சிக்கு மேல் உள்ள வான மண்டலத்தோடு சேர்க்கும் வகையை அறிந்தவர் யாருமில்லை. அந்த வகையை அறிந்து, அந்த ஒளியை வான மண்டலத்தோடு சேர்ப்பவர்கள், அங்கு ஊறும் தேன் போன்ற அமுதத்தை உண்டு தெளிவு பெற்று அதன் சிறப்பை உணர்வார்கள் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    உடலாகிய ஊனின் நெற்றி நடுவில் ஓர் ஒளி உள்ளது.

  • வரி 2

    அதைத் தலை உச்சிக்கு மேல் உள்ள வான மண்டலத்தோடு சேர்க்கும் வகையை அறிந்தவர் யாருமில்லை.

  • வரி 3

    அந்த வகையை அறிந்து, அந்த ஒளியை வான மண்டலத்தோடு சேர்ப்பவர்கள்,

  • வரி 4

    அங்கு ஊறும் தேன் போன்ற அமுதத்தை உண்டு தெளிவு பெற்று அதன் சிறப்பை உணர்வார்கள் என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #804

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout