தொடர்ந்து படிக்கread this section continuously
வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளேசிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்கட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.
உரைmeaning
உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்திருக்கும் ஏழு இடங்களிலும், தலை உச்சியைத் தாண்டிய நிலையிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன் என்பதை அறிந்துகொண்டு, அந்த இடங்களோடு தம் உயிர்சக்தியை ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்து கொள்வதில்லை. அப்படி இருக்கும் வழிமுறையைக் குருவானவர் மூலம் அறிந்து, தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால், கருப்பங்கட்டி போல் இனிக்கின்ற அமிர்தமான இறைவனைக் கண்டுகொள்ளலாம்.
Souls do not know the way to unite their own life-force with the seven places, blossoming like lotus flowers, within the body, and with the state beyond the crown of the head, where the power-filled forms of God reside. If that way is learned through a guru, and one comes to be united within with the divine power there and to realize it, one may find God, sweet as jaggery, the nectar he is.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்திருக்கும் ஏழு இடங்களோடு தமது உயிர்சக்தியைச் சேர்த்து வைக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்துகொள்வதில்லை.
Souls do not know the way to unite their own life-force with the seven places, blossoming like lotus flowers, within the body,
- வரி 2Line 2
தலை உச்சியைத் தாண்டிய நிலையிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன்; அந்நிலையோடு சேர்த்து வைக்கும் வழியையும் அவை அறிவதில்லை.
and with the state beyond the crown of the head, where the power-filled forms of God reside.
- வரி 3Line 3
அந்த வழிமுறையைக் குருவானவர் மூலம் அறிந்து, தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால்,
If that way is learned through a guru, and one comes to be united within with the divine power there and to realize it,
- வரி 4Line 4
கருப்பங்கட்டி போல் இனிக்கின்ற அமிர்தமான இறைவனைக் கண்டுகொள்ளலாம்.
one may find God, sweet as jaggery, the nectar he is.
திருமந்திரம் பாடல் #768





