திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 766

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.

உரை

இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை. இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால், இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். தமக்குள் இறைவன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டவர்களுக்கு, இறைவன் பேரறிவாய் நின்று அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான். பேரறிவாய் அமர்ந்திருக்கும் இறைவனையே எப்போதும் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள் தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை.

  • வரி 2

    இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு, தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால், இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

  • வரி 3

    அதை அறிந்துகொண்டவர்களுக்கு, இறைவன் பேரறிவாய் நின்று, அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான்.

  • வரி 4

    பேரறிவாய் அமர்ந்திருக்கும் இந்த இறைவனையே எப்போதும் தரிசித்துக்கொண்டு இருப்பவர்கள், தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.

திருமந்திரம் பாடல் #766

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout