தொடர்ந்து படிக்கread this section continuously
கூறும் பொருளி தகார வுகாரங்கள்தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்கூறும் மகாரங் குழல்வழி யோடிடஆறும் அமர்ந்திருக்கும் அண்ணலு மாமே.
உரைmeaning
தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்குக் கூறும் பொருள் ஓங்கார மந்திரத்தின் அகார உகார விளக்கமாகும். அகார உகார மகார எழுத்துக்கள் (அ, உ, ம்) சேர்ந்ததே ஓம் எனும் மந்திரம். அதில் அகாரம் சிவத்தையும், உகாரம் சக்தியையும், மகாரம் உயிரையும் குறிக்கும். குரு கூறிய ஓம் எனும் மந்திரத்தை தமது சிந்தனையுள் எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கும் சாதகர்களுக்கு, ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் தமக்குள் ஒளிந்திருக்கும் சக்தியே என்பதை உணர்ந்து, அதைத் தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால், அவர்களுக்குள் இருக்கும் ஆறு இடங்களிலும் சக்திமயமாக அமர்ந்திருக்கும் இறைசக்தியும் தாமே என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
What is taught to those, among the seekers who come to him, who are worthy, is the explanation of the letters akara and ukara within the mantra Om. The letters akara, ukara and makara (a, u, m) joined together form the mantra Om. Within it, akara denotes Shiva, ukara denotes Shakti, and makara denotes the soul. For practitioners who hold the mantra Om, as taught by their guru, always in their thought, they come to realize that the meaning of the mantra Om is the power hidden within them, and, once they unite it with the divine power within them, they come to realize that the divine power seated, filled with that power, in the six places within them, is themselves as well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்குக் கூறும் பொருள், ஓங்கார மந்திரத்தின் அகார உகார விளக்கமாகும்.
What is taught to those, among the seekers who come to him, who are worthy, is the explanation of the letters akara and ukara within the mantra Om.
- வரி 2Line 2
அகார உகார மகார எழுத்துக்கள் சேர்ந்ததே ஓம் எனும் மந்திரம்; அதில் அகாரம் சிவத்தையும், உகாரம் சக்தியையும், மகாரம் உயிரையும் குறிக்கும்.
The letters akara, ukara and makara joined together form the mantra Om, in which akara denotes Shiva, ukara denotes Shakti, and makara denotes the soul.
- வரி 3Line 3
குரு கூறிய இந்த மந்திரத்தைத் தமது சிந்தனையுள் எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கும் சாதகர்கள்,
For practitioners who hold this mantra, as taught by their guru, always in their thought,
- வரி 4Line 4
தமக்குள் இருக்கும் ஆறு இடங்களிலும் சக்திமயமாக அமர்ந்திருக்கும் இறைசக்தியும் தாமே என்பதை உணர்ந்துகொள்வார்கள்.
they come to realize that the divine power seated, filled with power, in the six places within them, is themselves as well.
திருமந்திரம் பாடல் #765





