திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 764

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லைநாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்தேடவல் லார்கள் தெரிந்த பொருளிதுகூடவல் லார்களுக்குக் கூறலு மாமே.

உரை

தமக்குள் உறுதியுடன் இறைவனைத் தேடி அடையக்கூடியவர்களுக்கு இறப்பு இல்லை. இவ்வுலகத்தில் எந்தக் குறையும் இன்றி உயிர்களுக்குத் தலைவனாக இருப்பார்கள். இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்களுக்குத் தெரிந்த பொருள் இதுவாகும். அவர்கள் அறிந்த இறைவனை அடையும் வழியைக் காட்டும்படி கேட்பவர்களில் தகுதியுள்ளவர்களுக்குத் தான் அறிந்ததை எடுத்துக் கூறுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தமக்குள் உறுதியுடன் இறைவனைத் தேடி அடையக்கூடியவர்களுக்கு இறப்பு இல்லை.

  • வரி 2

    இவ்வுலகத்தில் எந்தக் குறையும் இன்றி உயிர்களுக்குத் தலைவனாக இருப்பார்கள்.

  • வரி 3

    இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்களுக்குத் தெரிந்த பொருள் இதுவாகும்.

  • வரி 4

    இறைவனை அடையும் வழியைக் காட்டும்படி கேட்பவர்களில் தகுதியுள்ளவர்களுக்குத் தாம் அறிந்ததை எடுத்துக் கூறுவார்கள்.

திருமந்திரம் பாடல் #764

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout