திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 763

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளேஎண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

உரை

மூன்று கண்களுடைய பிறப்பில்லாத இறைவனை, தனது எண்ணங்கள் அனைத்திலும் காணக்கூடிய சாதகனின் உள்ளே குருவாய் அமர்ந்து, அனைத்திற்கும் ஒருவனாகவும் எதிலும் உறுதியாக நிலைத்து இருப்பவனுமான இறைவனின் திருவடிகள், தனக்குள்ளே உறுதியுடன் தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கே கிடைக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    மூன்று கண்களையுடைய பிறப்பில்லாத இறைவன், தனது எண்ணங்கள் அனைத்திலும் அவனைக் காணக்கூடிய சாதகனுக்குள் குருவாய் அமர்ந்திருக்கின்றான்.

  • வரி 2

    அனைத்திற்கும் ஒருவனாக இருப்பவன் அவனே.

  • வரி 3

    எதிலும் உறுதியாக நிலைத்து இருப்பவனும் அவனே.

  • வரி 4

    அவனுடைய திருவடிகள், தமக்குள்ளேயே உறுதியுடன் தேடிச் சரணாகதியாய் இருப்பவர்களுக்கே கிடைக்கும்.

திருமந்திரம் பாடல் #763

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout