திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 762

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்கழியாத அப்பொருள் காணலு மாமே.

உரை

இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதைக் காண முடியாதவர்கள், தாம் பெரிதாக எண்ணியிருந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் தம் கண் முன்பே அழிந்து போவதைக் காண்கிறார்கள். அழிகின்ற உடலுக்குள்ளும் செல்வத்துக்குள்ளும் என்ன இருக்கின்றதென்று ஆராய்ந்து பார்த்தால், அழிகின்ற அனைத்துப் பொருட்களுக்குள்ளும் என்றும் அழியாத பெரும் செல்வமான இறைவன் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதைக் காண முடியாதவர்கள்,

  • வரி 2

    இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால், தாம் பெரிதாக எண்ணியிருந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் தம் கண்முன்பே அழிந்து போவதைக் காண்கிறார்கள்.

  • வரி 3

    அழிகின்ற உடலுக்குள்ளும் அழிகின்ற செல்வத்துக்குள்ளும் என்ன இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால்,

  • வரி 4

    அழிகின்ற அனைத்துப் பொருட்களுக்குள்ளும் என்றும் அழியாத பெரும் செல்வமான இறைவன் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

திருமந்திரம் பாடல் #762

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout