திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 761

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்காணகி லாதார் கழிந்த பொருளெலாங்காணகி லாமலே கழிகின்ற வாறே.

உரை

இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராதவர்கள் தங்களின் வாழ்க்கையை வீணே வாழ்ந்து கழித்து, மீண்டும் பிறக்கும்படி இறந்து போகின்றார்கள். இறை சக்தியை அடையும் வழியைக் கற்று அறிந்தவர்கள் கூட, தாம் கற்ற கல்வியை உபயோகித்துப் பயன் பெறாமல், அதைப் பற்றிப் பலவிதமாகப் பேசுவதில் காலத்தைக் கழித்துக் கொண்டு, தாம் கற்றதெல்லாம் பயனில்லாமல் போகின்றதென்ற நாணம் இல்லாமல் காலத்தை வீணடிக்கின்றார்கள். இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால், தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதையும் காணமலேயே, இவர்களின் காலம் வீணாகக் கழிந்துவிடுகின்றது.

வரி வாரியாக

  • வரி 1

    இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராதவர்கள், தமது வாழ்க்கையை வீணே கழித்து, மீண்டும் பிறக்கும்படி இறந்து போகின்றார்கள்.

  • வரி 2

    இறை சக்தியை அடையும் வழியைக் கற்று அறிந்தவர்களும், அதன் பயனைப் பெறாமல், அதைப் பற்றிப் பலவிதமாகப் பேசுவதிலேயே காலத்தை நாணமின்றி வீணடிக்கின்றார்கள்.

  • வரி 3

    இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால், தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதையும் இவர்கள் காண்பதில்லை.

  • வரி 4

    அதைக் காணாமலேயே இவர்களின் காலம் வீணாகக் கழிந்துவிடுகின்றது.

திருமந்திரம் பாடல் #761

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout