தொடர்ந்து படிக்கread this section continuously
உயருறு வாருல கத்தொடுங் கூடிப்பயனுறு வார்பலர் தாமறி யாமற்செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்கயலுறு கண்ணியைக் காணகி லாரே.
உரைmeaning
அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைந்த யோகியர்கள், உலகத்தவர்கள்மேல் கொண்ட கருணையினால், அவர்கள் அறியாமலேயே அவர்களோடு கலந்து நின்று, பல நல்வினைகளைப் புரிந்து பயன்பெற வைக்கின்றார்கள். உலகத்தவர்களையும் பயன்பெற வைக்கின்ற இந்த உயர்வான நிலையைப் பற்றித் தெரியாத, அல்லது அதில் விருப்பமில்லாதவர்கள், தங்களின் கர்மவினைகளைச் செய்துகொண்டு வீணாக வாழ்க்கையைக் கழித்து, மீன்களைப் போல் எப்போதும் கண்மூடாமல், அன்பர்களுக்கு அருள்கொடுக்கும் இறை சக்தியைக் காணாமலேயே காலத்தைக் கழித்து அழிந்து போகின்றார்கள்.
Yogis who have attained a state surpassing everything, out of the compassion they hold for the people of this world, unknown to those people, remain mingled with them and perform many good deeds so that they may benefit. Those who do not know of, or have no wish for, this exalted state that benefits even the people of the world, go on doing their own karmic deeds, waste their lives in vain, and, like fish that never close their eyes, pass their time without ever beholding the divine power that grants grace to its devotees, and perish.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைந்த யோகியர்கள், உலகத்தவர்கள்மேல் கொண்ட கருணையினால்,
Yogis who have attained a state surpassing everything, out of the compassion they hold for the people of this world,
- வரி 2Line 2
அவர்கள் அறியாமலேயே அவர்களோடு கலந்து நின்று, பல நல்வினைகளைப் புரிந்து அவர்களைப் பயன்பெற வைக்கின்றார்கள்.
unknown to those people, remain mingled with them and perform many good deeds so that they may benefit.
- வரி 3Line 3
இந்த உயர்வான நிலையைப் பற்றித் தெரியாத, அல்லது அதில் விருப்பமில்லாதவர்கள், தமது கர்மவினைகளைச் செய்துகொண்டு வாழ்க்கையை வீணே கழிக்கின்றார்கள்.
Those who do not know of, or have no wish for, this exalted state, go on doing their own karmic deeds and waste their lives in vain,
- வரி 4Line 4
மீன்களைப் போல் எப்போதும் கண்மூடாமல், அன்பர்களுக்கு அருள்கொடுக்கும் இறை சக்தியைக் காணாமலேயே காலத்தைக் கழித்து அழிந்து போகின்றார்கள்.
and, like fish that never close their eyes, pass their time without ever beholding the divine power that grants grace to its devotees, and perish.
திருமந்திரம் பாடல் #760





