தொடர்ந்து படிக்கread this section continuously
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்றுஅகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்குகங்கோடி கண்டங் குயருறு வாரே.
உரைmeaning
கோடி யுகங்களைக் கண்ட யோகியர்கள், சிறிதும் தளர்வின்றி தமது யோகத்திலேயே நிலைபெற்று நின்று, தான் எனும் எண்ணம் இல்லாமல் இறைவனும் தாமும் வேறு இல்லை என்பதையும் காண்பார்கள். தமக்குள் உணர்ந்த சிவத்தின் ஒளி உருவத்தையும் கடந்து, உருவமும் குணமும் இல்லாத இறை நிலையை அடைந்து, பல கோடி யுகங்களையும் கண்டு, அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைவார்கள்.
Yogis who have witnessed a crore ages, standing established without the least faltering in their yoga, come to see, without the thought of self, that they and God are not different. Going even beyond the light-form of Shiva realized within them, and attaining the state of God that has neither form nor quality, they witness many crore ages, and attain a state that surpasses everything.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கோடி யுகங்களைக் கண்ட யோகியர்கள், சிறிதும் தளர்வின்றித் தமது யோகத்திலேயே நிலைபெற்று நின்று,
Yogis who have witnessed a crore ages, standing established without the least faltering in their yoga,
- வரி 2Line 2
தான் எனும் எண்ணம் இல்லாமல், இறைவனும் தாமும் வேறு இல்லை என்பதைக் காண்பார்கள்.
come to see, without the thought of self, that they and God are not different.
- வரி 3Line 3
தமக்குள் உணர்ந்த சிவத்தின் ஒளி உருவத்தையும் கடந்து, உருவமும் குணமும் இல்லாத இறை நிலையை அடைந்து,
Going even beyond the light-form of Shiva realized within them, and attaining the state of God that has neither form nor quality,
- வரி 4Line 4
பல கோடி யுகங்களையும் கண்டு, அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைவார்கள்.
they witness many crore ages, and attain a state that surpasses everything.
திருமந்திரம் பாடல் #759





