தொடர்ந்து படிக்கread this section continuously
சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்மூத்துடன் கோடியே யுகமது வாமே.
உரைmeaning
சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதைக் காண்பார்கள். இறைவனோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள், பேரறிவால் முதிர்ந்து, கோடி ஆண்டுகளுக்கும் உடல் அழியாமல் இருந்து, பல யுகங்களையும் காண்பார்கள்.
Those who stand having crossed the full hundred years of age declared by the scriptures see their body remain unbroken for a thousand years more. Those who remain merged with God for more than a thousand years mature in great wisdom, and, their body unperishing for a crore of years, come to witness many ages.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பவர்கள்,
Those who stand having crossed the full hundred years of age declared by the scriptures
- வரி 2Line 2
அதற்கு மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உடல் கட்டுக்குலையாமல் இருப்பதைக் காண்பார்கள்.
see their body remain unbroken for a thousand years more.
- வரி 3Line 3
இறைவனோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள், பேரறிவால் முதிர்ந்து,
Those who remain merged with God for more than a thousand years mature in great wisdom,
- வரி 4Line 4
கோடி ஆண்டுகளுக்கும் உடல் அழியாமல் இருந்து, பல யுகங்களையும் காண்பார்கள்.
and, their body unperishing for a crore of years, come to witness many ages.
திருமந்திரம் பாடல் #758





