திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 757

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கேஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்சாத்திடு நூறு தலைப்புஎய்ய லாமே.

உரை

இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகிவிடும் வழிமுறையை அறிந்து, அதன்படியே தொடர்ந்து பயிலும் யோகியர், இறைவனின் ஒளி உருவத்தோடு கலந்து, அதையும் தாண்டி, மேலுள்ள மூன்று மண்டலங்களில் மூன்றாவதில், எட்டுத் திசைகளும் பரவி விரியும்படி இறைவனின் ஒளி உருவத்தை தமக்குள் ஏற்றிவைத்து, பேரின்பத்தில் திளைத்து அதைத் தரிசித்துக் கொண்டே இருப்பவர்கள், சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகிவிடும் வழிமுறையை அறிந்து, அதன்படியே தொடர்ந்து பயிலும் யோகியர், இறைவனின் ஒளி உருவத்தோடு கலந்து,

  • வரி 2

    அதையும் தாண்டி, எட்டுத் திசைகளும் பரவி விரியும்படி இறைவனின் ஒளி உருவத்தைத் தமக்குள் ஏற்றிவைத்து,

  • வரி 3

    மேலுள்ள மூன்று மண்டலங்களில் மூன்றாவதில், பேரின்பத்தில் திளைத்து அதைத் தரிசித்துக்கொண்டே இருப்பவர்கள்,

  • வரி 4

    சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பார்கள்.

திருமந்திரம் பாடல் #757

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout