தொடர்ந்து படிக்கread this section continuously
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினிநன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்குன்றிடையில் பொன்திகழ் கூத்தனு மாமே.
உரைmeaning
இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகி இருப்பவர்கள் அடையும், அளவில்லாத காலம் ஆயுள் வளர்ந்து அழியாமல் இருக்கும் முறையைக் கேளுங்கள். தமக்குள் இருக்கும் இறைவனை அடைய உதவும் மூன்று வழிகள் வழியாக மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மேலேற்றிக் கீழிறக்கிச் சுழற்சி செய்துகொண்டே இருந்தால், பல காலங்கள் உடல் அழியாமல் சென்று கொண்டே இருக்கும். முப்பது நாட்களுக்கு முறையாகச் செய்த பின்பு, குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம் போல, தலை உச்சியில் பொன் நிற ஜோதி உருவமாக இருக்கும் இறைவனே தாமாகி, ஒளிப் பிரகாசமாக எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.
Hear the way by which those who have merged inseparably with God and themselves become Shiva come to have their lifespan grow boundlessly and remain undestroyed. Circulating the breath, drawing it in, raising it and letting it descend, through the three paths that help one reach the God within, if this is done continually, the body goes on for many ages without perishing. Doing this properly for thirty days, then, like a lamp lit atop a hill, they themselves become the golden-light form of God enthroned at the crown of the head, and remain shining, spreading that light everywhere.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகி இருப்பவர்கள் அடையும், அளவில்லாத காலம் ஆயுள் வளர்ந்து அழியாமல் இருக்கும் முறையைக் கேளுங்கள்.
Hear the way by which those who have merged inseparably with God and themselves become Shiva come to have their lifespan grow boundlessly and remain undestroyed.
- வரி 2Line 2
தமக்குள் இருக்கும் இறைவனை அடைய உதவும் மூன்று வழிகள் வழியாக, மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மேலேற்றிக் கீழிறக்கிச் சுழற்சி செய்து,
Circulating the breath, drawing it in, raising it and letting it descend, through the three paths that help one reach the God within,
- வரி 3Line 3
அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், பல காலங்கள் உடல் அழியாமல் சென்றுகொண்டே இருக்கும்; முப்பது நாட்களுக்கு முறையாகச் செய்த பின்பு,
if this is done continually the body goes on for many ages without perishing; doing this properly for thirty days,
- வரி 4Line 4
குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம் போல, தலை உச்சியில் பொன்னிற ஜோதி உருவமாக இருக்கும் இறைவனே தாமாகி, ஒளிப் பிரகாசமாக எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.
then, like a lamp lit atop a hill, they themselves become the golden-light form of God enthroned at the crown of the head, remaining shining, spreading that light everywhere.
திருமந்திரம் பாடல் #756





