திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 755

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்ஆத்தனு மாகி யலர்ந்துவிடு மொன்றே.

உரை

தலை உச்சியைத் தாண்டிய இடத்தில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனைத் தரிசித்து, தமக்குள் இறைத்தன்மைகள் பலவற்றைக் கண்டவர்கள், சாஸ்திரங்கள் கூறும் தர்மங்களையே தலையானதாகக் கொண்டு, அவற்றை விட்டு சிறிதும் விலகாமல் கடைபிடித்து நிற்பவர்கள். தர்மம் தவறாமல் நின்று, தமக்குள்ளேயே இறைவனின் திருவடியையும் திருநடனத்தையும் தரிசித்துக்கொண்டு, அவனருளால் பெற்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், தாமே சிவமாகி, அவனைப் போலவே எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தலை உச்சியைத் தாண்டிய இடத்தில் திருநடனம் புரிந்துகொண்டிருக்கும் இறைவனைத் தரிசித்து, அதனால் தமக்குள் இறைத்தன்மைகள் பலவற்றைக் கண்டவர்கள்,

  • வரி 2

    சாஸ்திரங்கள் கூறும் தர்மங்களையே தலையானதாகக் கொண்டு, அவற்றை விட்டுச் சிறிதும் விலகாமல் கடைபிடித்து நிற்பார்கள்.

  • வரி 3

    தர்மம் தவறாமல் நின்று, தமக்குள்ளேயே இறைவனின் திருவடியையும் திருநடனத்தையும் தரிசித்து, அவனருளால் பெற்ற பேரின்பத்தை அனுபவிப்பவர்கள்,

  • வரி 4

    தாமே சிவமாகி, அவனைப் போலவே எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #755

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout