திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 754

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

உரை

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பிறந்து கொண்டே இருக்கின்ற உயிர்கள், தம்மோடு எப்போதும் துணையாக இருக்கும் இறைவனின் திருவடியைத் தாங்கிக் கொண்டிருக்கும் மலரைக் காண்பதில்லை. இறந்த பிறகு நெருப்பில் இடப்படும் இந்த உடலை நிரந்தரம் என்று எண்ணாமல், தமக்குள்ளேயே துணையாக இருக்கும் இறைவனே என்றும் நிரந்தரம் என்பதை உணர்ந்து, அவனது திருவடிகளைச் சென்று அடையும் வழியைக் கண்டுகொண்டவர்கள், அந்த வழியே சென்று, தலை உச்சியைத் தாண்டிய இடத்தில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனைக் கண்டு உணர்ந்து, அவனோடு கலந்து பேரின்பத்தில் இருக்கலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பிறந்துகொண்டே இருக்கின்ற உயிர்கள், தம்மோடு எப்போதும் துணையாக இருக்கும் இறைவனின் திருவடியைத் தாங்கிக்கொண்டிருக்கும் மலரைக் காண்பதில்லை.

  • வரி 2

    இறந்த பிறகு நெருப்பில் இடப்படும் இந்த உடலை நிரந்தரம் என்று எண்ணாமல்,

  • வரி 3

    தமக்குள்ளேயே துணையாக இருக்கும் இறைவனே என்றும் நிரந்தரம் என்பதை உணர்ந்து, அவனது திருவடிகளைச் சென்று அடையும் வழியைக் கண்டுகொள்ள வேண்டும்.

  • வரி 4

    அவ்வழியைக் கண்டுகொண்டவர்கள், தலை உச்சியைத் தாண்டிய இடத்தில் திருநடனம் புரிந்துகொண்டிருக்கும் இறைவனைக் கண்டு உணர்ந்து, அவனோடு கலந்து பேரின்பத்தில் இருக்கலாம்.

திருமந்திரம் பாடல் #754

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout