திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 753

மூன்றாம் தந்திரம்14. காலச்சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீஅணங்குட னாதித்த னாறு விரியின்வணங்குட னேவந்த வாழ்வு குலைந்துசுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

உரை

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு, இறைவனை அடைய உதவும் இந்தப் பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேளுங்கள். வினைகளைத் தீர்த்துக்கொண்டு தம்மை வந்து அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த பிறவியை, உயிர்கள் தங்களது ஆசைகளின் வழியிலேயே சென்று, மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக் கொண்டே இருந்தால், இறைவனை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்கிடும் நிலை பெற வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து, எந்தவித இலக்கும் இல்லாமல் திரியும் நாய்களைப்போல் திரிந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து அழிகின்ற வாழ்க்கையாக மாறிவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், இறைவனை அடைய உதவும் இந்தப் பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேளுங்கள்.

  • வரி 2

    வினைகளைத் தீர்த்துக்கொண்டு தம்மை வந்து அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த பிறவியை உயிர்கள் அவ்வாறு பயன்படுத்தாமல்,

  • வரி 3

    தமது ஆசைகளின் வழியிலேயே சென்று, மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக்கொண்டே இருந்தால், இறைவனை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்கும் நிலை பெற வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்துவிடும்.

  • வரி 4

    எந்த இலக்கும் இல்லாமல் திரியும் நாய்களைப் போலத் திரிந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து அழிகின்ற வாழ்க்கையாக அது மாறிவிடும்.

திருமந்திரம் பாடல் #753

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout