தொடர்ந்து படிக்கread this section continuously
விதித்த இருபத்தெட் டொடுமூன் றாகத்தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.
உரைmeaning
இருபத்தி எட்டு நாட்கள் முடிந்த பின், அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறிய முயலும் சாதகர்கள், தமக்குள் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையும் ஒன்றாகத் தொகுத்து, தமது மூச்சுக்காற்றைப் பதினெட்டு அங்குலம் தாண்டிய நிலையில் பதித்து, முன்பு உணர்ந்த நான்கு உயர் தத்துவங்களிலேயே மனதைச் செலுத்தி அகயோகம் பயின்றால், ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே என்பதை அறிந்து கொள்ளலாம்.
After the twenty-eight days have passed, practitioners striving to know the God who transcends everything gather together the thirty-six principles within them, fix their breath eighteen inches beyond that state, and, setting their mind upon the four supreme principles they had already realized, practice inner yoga; and so they may come to know that the God who exists as the five Shiva principles is the one and only Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இருபத்தெட்டு நாட்கள் முடிந்த பின், அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை அறிய முயலும் சாதகர்கள்,
After the twenty-eight days have passed, practitioners striving to know the God who transcends everything
- வரி 2Line 2
தமக்குள் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையும் ஒன்றாகத் தொகுத்து,
gather together the thirty-six principles within them,
- வரி 3Line 3
அந்நிலையைக் கடந்து பதினெட்டு அங்குலத்தில் தமது மூச்சுக்காற்றைப் பதித்து, முன்பே உணர்ந்த நான்கு உயர் தத்துவங்களிலேயே மனதைச் செலுத்தி,
fix their breath eighteen inches beyond that state, setting their mind upon the four supreme principles they had already realized,
- வரி 4Line 4
அகயோகம் பயின்றால், ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே என்பதை அறிந்துகொள்ளலாம்.
and practice inner yoga; and so they may come to know that the God who exists as the five Shiva principles is the one and only Lord.
திருமந்திரம் பாடல் #747





