தொடர்ந்து படிக்கread this section continuously
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்பற்றிய பத்தும் பலவகை நாழிகைஅற்ற தறியாது அழிகின்ற வாறே.
உரைmeaning
முதல் நிலையில் ஐம்புலன்களால் பெறும் ஐந்து அறிவும், அதனுடன் நன்மை தீமை பகுக்கும் அறிவு சேர்ந்து பெறும் ஆறாம் அறிவும், அதனுடன் மனம் சேர்ந்து பெறும் ஏழாம் அறிவும், அதனுடன் கல்வி சேர்ந்து பெறும் எட்டாம் அறிவும், அதனுடன் அனுபவம் சேர்ந்து பெறும் ஒன்பதாம் அறிவும், எல்லாம் இறையருளே என உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொண்டு பெறும் பத்தாம் அறிவும் ஆகிய இந்த ஆறு நிலை அறிவுகளையும் கொண்டு, அழியும் உடலைவிட்டு அழியாத ஞானத்தை அடைவது எப்படி என்பதை அறியாமலேயே பல உயிர்கள் பலவகை நாழிகைப் பொழுதுகளில் வீணாக அழிந்துபோகின்றன.
The first is the five kinds of knowledge gained through the five senses; joined with the knowledge that discerns good from bad, the sixth is gained; joined further with the mind, the seventh is gained; joined further with learning, the eighth is gained; joined further with experience, the ninth is gained; and realizing that all of this is by God's grace alone, and holding fast to his sacred feet, the tenth is gained. With these six stages of knowledge, many souls, across their many hours, perish uselessly, never knowing how to leave the perishable body and attain the imperishable wisdom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முதல் நிலையில் ஐம்புலன்களால் பெறும் ஐந்து அறிவும், அதனுடன் நன்மை தீமை பகுக்கும் அறிவு சேர்ந்து பெறும் ஆறாம் அறிவும்,
The first is the five kinds of knowledge gained through the five senses; joined with the knowledge that discerns good from bad, the sixth is gained;
- வரி 2Line 2
அதனுடன் மனம் சேர்ந்து பெறும் ஏழாம் அறிவும், அதனுடன் கல்வி சேர்ந்து பெறும் எட்டாம் அறிவும்,
joined further with the mind, the seventh is gained; joined further with learning, the eighth is gained;
- வரி 3Line 3
அதனுடன் அனுபவம் சேர்ந்து பெறும் ஒன்பதாம் அறிவும், எல்லாம் இறையருளே என உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொண்டு பெறும் பத்தாம் அறிவும்,
joined further with experience, the ninth is gained; and realizing that all of this is by God's grace alone, and holding fast to his sacred feet, the tenth is gained;
- வரி 4Line 4
ஆகிய இந்த ஆறு நிலை அறிவுகளையும் கொண்டு, அழியும் உடலைவிட்டு அழியாத ஞானத்தை அடைவது எப்படி என்பதை அறியாமலேயே பல உயிர்கள் பலவகை நாழிகைப் பொழுதுகளில் வீணாக அழிந்துபோகின்றன.
with these six stages of knowledge, many souls, across their many hours, perish uselessly, never knowing how to leave the perishable body and attain the imperishable wisdom.
திருமந்திரம் பாடல் #741





