தொடர்ந்து படிக்கread this section continuously
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாகமான்கன்று நின்று வளருகின்ற வாறே.
உரைmeaning
நெற்றி நடுவில் கண்ட ஒளியும், நான்கு கலைகளைக் கொண்டு ஏழு இடங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும், உடல் முழுவதையும் மூடியிருக்கும் தோலும், தமக்குள் உணர்ந்த மெய்யுணர்வுக்கு மருந்தாக அமைய, மான் கன்று கீரையைத் தின்று வளர்வதைப் போல, மெய்யுணர்வை உண்டு ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகின்றது.
The light seen at the centre of the forehead, the breath carried with four measures to all seven places, and the skin that covers the whole body, all becoming medicine for the true awareness realized within, the soul, just as a fawn grows by feeding on tender greens, feeds on that true awareness and matures to the state where there is no more birth.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நெற்றி நடுவில் கண்ட ஒளியும், நான்கு கலைகளைக் கொண்டு ஏழு இடங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும்,
The light seen at the centre of the forehead, and the breath carried with four measures to all seven places,
- வரி 2Line 2
உடல் முழுவதையும் மூடியிருக்கும் தோலும், தமக்குள் உணர்ந்த மெய்யுணர்வுக்கு மருந்தாக அமைய,
and the skin that covers the whole body, all becoming medicine for the true awareness realized within,
- வரி 3Line 3
மான் கன்று கீரையைத் தின்று வளர்வதைப் போல,
just as a fawn grows by feeding on tender greens,
- வரி 4Line 4
மெய்யுணர்வை உண்டு ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகின்றது.
the soul feeds on that true awareness and matures to the state where there is no more birth.
திருமந்திரம் பாடல் #738





