தொடர்ந்து படிக்கread this section continuously
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்கூறா உபதேசங் கொண்டது காணுமே.
உரைmeaning
எப்போதும் அசையாத மலவாயிலுக்கு மேலே இரு விரற்கடை தூரத்திலும், சொல்லாமலே உணரப்படும் இலிங்கக் குறிக்குக் கீழே இரு விரற்கடை தூரத்திலும் உள்ள அந்த இடத்தை நோக்கி, பாடல் #731-இல் சொன்ன மந்திரத்தை மனத்திற்குள் தியானித்தால், உடலின் ஆறு இடங்களிலும் உள்ள அதே இறை ஆற்றல் அங்கேயும் அக்கினியாக இருப்பதைக் கண்டு உணரலாம்.
Fixing the mind on that place which lies two fingers above the ever-present passage of waste and two fingers below the sign that is felt without being spoken, and meditating there within the mind on the mantra given in verse 731, one can see and realize that the same divine power present in all six places of the body is present there too, as fire.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எப்போதும் அசையாத மலவாயிலுக்கு மேலே இரு விரற்கடை தூரத்திலும்,
Two fingers above the ever-present passage of waste,
- வரி 2Line 2
சொல்லாமலே உணரப்படும் இலிங்கக் குறிக்குக் கீழே இரு விரற்கடை தூரத்திலும் உள்ள அந்த இடத்தை நோக்கி,
and two fingers below the sign that is felt without being spoken, fixing the mind on that place,
- வரி 3Line 3
பாடல் #731-இல் சொன்ன மந்திரத்தை மனத்திற்குள் தியானித்தால்,
and meditating there within the mind on the mantra given in verse 731,
- வரி 4Line 4
உடலின் ஆறு இடங்களிலும் உள்ள அதே இறை ஆற்றல் அங்கேயும் அக்கினியாக இருப்பதைக் கண்டு உணரலாம்.
one can see and realize that the same divine power present in all six places of the body is present there too, as fire.
திருமந்திரம் பாடல் #733





