தொடர்ந்து படிக்கread this section continuously
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்சத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே.
உரைmeaning
இறைவன் உறையும் உடலாகிய கோயிலில் இடமும் வலமும் சாதித்த சாதகனுக்கு, மத்தியான நேரத்தில் புல்லாங்குழலில் புகுந்த காற்றின் இசை போன்ற ஒலி கேட்கும்படியும், தித்திக்கும் பேரின்பக் கூத்தும் சிவனும் வெளிப்படும்படியும் ஆகும் என்பது, சதாநந்தியின் ஆணையாக, நாங்கள் சொன்ன உண்மை.
For the practitioner who has accomplished going left and right within the temple that is the body where God dwells, at midday a sound like the music of wind entering a flute may be heard, and the sweet, blissful dance and Shiva himself will manifest. This is the truth we have declared, by the oath of Sadanandi.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் உறையும் உடலாகிய கோயிலில் இடமும் வலமும் சாதித்த சாதகனுக்கு,
For the practitioner who has accomplished going left and right within the temple that is the body where God dwells,
- வரி 2Line 2
மத்தியான நேரத்தில் புல்லாங்குழலில் புகுந்த காற்றின் இசை போன்ற ஒலி கேட்கும்படியும்,
at midday a sound like the music of wind entering a flute may be heard,
- வரி 3Line 3
தித்திக்கும் பேரின்பக் கூத்தும் சிவனும் வெளிப்படும்படியும் ஆகும்.
and the sweet, blissful dance and Shiva himself will manifest.
- வரி 4Line 4
என்பது, சதாநந்தியின் ஆணையாக, நாங்கள் சொன்ன உண்மை.
This is the truth we have declared, by the oath of Sadanandi.
திருமந்திரம் பாடல் #730





