தொடர்ந்து படிக்கread this section continuously
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்றுமீதான தற்பரை மேவும் பரனொடுமேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளிஓதா அசிந்தமீ தானந்த யோகமே.
உரைmeaning
யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி, மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று, அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி, தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து, அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்திருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகம் என்கிறது பாடல்.
The verse speaks of raising the kundalini power through yoga, joining and mingling with the deities that dwell at the six root chakras, mūlādhāram and the rest, uniting further with Sadasivamurthy who dwells at the sahasrara above them and becoming nectar, then mingling, at the inner tongue four fingers below the crown, with the moving power that is the supreme light, and thereafter rising to be joined inseparably, in the space twelve fingers above the crown called the dvadasanta, with the unmoving power that is the supreme sound. This, the verse says, is Ananda Yoga, the bliss giving union.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி, மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று,
The verse speaks of raising the kundalini power through yoga, joining and mingling with the deities that dwell at the six root chakras, mūlādhāram and the rest,
- வரி 2Line 2
அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி,
uniting further with Sadasivamurthy who dwells at the sahasrara above them and becoming nectar,
- வரி 3Line 3
தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து,
then mingling, at the inner tongue four fingers below the crown, with the moving power that is the supreme light,
- வரி 4Line 4
அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்திருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகம் என்கிறது பாடல்.
and thereafter rising to be joined inseparably, in the space twelve fingers above the crown, the dvadasanta, with the unmoving power that is the supreme sound: this, the verse says, is Ananda Yoga, the bliss giving union.
திருமந்திரம் பாடல் #709





