தொடர்ந்து படிக்கread this section continuously
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்துசாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்பாலித்த சத்தி பரைபரன் பாதமே.
உரைmeaning
மூலாதாரத்தில் வீற்றிருந்து வேதங்களை ஓதிக்கொண்டே இருக்கின்ற பிரம்மனும், சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கின்ற திருமாலும், மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்ற உருத்திரனும், அநாகதத்தில் வீற்றிருக்கின்ற மகேஸ்வரனும், விசுத்தியில் வீற்றிருக்கின்ற சதாசிவனும், ஆக்ஞையில் வீற்றிருக்கின்ற ஒளியும், சகஸ்ரரத்தில் வீற்றிருக்கின்ற ஒலியும், அதைத் தாண்டி உள் நாக்கிற்கு மேலே அமிர்தம் கொட்டுகின்ற இடத்தில் வீற்றிருக்கும் பரஒளியும், தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலம் உயரத்தில் உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் பரஒலியும் ஆகிய இந்த ஒன்பதுவிதமான சக்திகளும், அசையாத சக்தி (பரன்-சிவம்), அசையும் சக்தி (பரை-சக்தி) என்று இரண்டாக விளங்கும் பராபரையின் திருவடிகளே என்கிறது பாடல்.
The verse says that Brahma, seated at the mūlādhāram, endlessly reciting the Vedas; Tirumal, seated at the swadhishthana; Rudra, seated at the manipuraka; Maheswaran, seated at the anahata; Sadasivan, seated at the vishuddhi; the light seated at the ajna; the sound seated at the sahasrara; the supreme light seated beyond that, at the place above the inner tongue where nectar pours; and the supreme sound seated in the space twelve fingers above the crown, called the dvadasanta, these nine powers together, standing as the unmoving power, Paran who is Sivam, and the moving power, Parai who is Shakti, are the very holy feet of Paraparai.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூலாதாரத்தில் வீற்றிருந்து வேதங்களை ஓதிக்கொண்டே இருக்கின்ற பிரம்மனும், சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கின்ற திருமாலும், மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்ற உருத்திரனும், அநாகதத்தில் வீற்றிருக்கின்ற மகேஸ்வரனும்,
Brahma, seated at the mūlādhāram, endlessly reciting the Vedas; Tirumal, seated at the swadhishthana; Rudra, seated at the manipuraka; Maheswaran, seated at the anahata;
- வரி 2Line 2
விசுத்தியில் வீற்றிருக்கின்ற சதாசிவனும், ஆக்ஞையில் வீற்றிருக்கின்ற ஒளியும், சகஸ்ரரத்தில் வீற்றிருக்கின்ற ஒலியும்,
Sadasivan, seated at the vishuddhi; the light seated at the ajna; the sound seated at the sahasrara;
- வரி 3Line 3
அதைத் தாண்டி உள் நாக்கிற்கு மேலே அமிர்தம் கொட்டுகின்ற இடத்தில் வீற்றிருக்கும் பரஒளியும், தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலம் உயரத்தில் உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் பரஒலியும் ஆகிய இந்த ஒன்பதுவிதமான சக்திகளும்,
the supreme light seated beyond that, at the place above the inner tongue where nectar pours; and the supreme sound seated in the space twelve fingers above the crown, the dvadasanta, these nine powers together,
- வரி 4Line 4
அசையாத சக்தி (பரன்-சிவம்), அசையும் சக்தி (பரை-சக்தி) என்று இரண்டாக விளங்கும் பராபரையின் திருவடிகளே என்கிறது பாடல்.
the verse says, standing as the unmoving power, Paran who is Sivam, and the moving power, Parai who is Shakti, are the very holy feet of Paraparai.
திருமந்திரம் பாடல் #708





