திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 707

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்துபாதங்கள் நோவ நடந்தும் பயனில்லைகாதலில் அண்ணலைக் காண இனியவர்நாதன் இருக்கின்ற நகரறி வாரே.

உரை

இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக்கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும், தனது பாதங்கள் வலிக்கும் வரை நடந்து தேடினாலும் ஒரு பயனும் இல்லை. பார்க்கும் அனைத்தையும் இறைவனாகப் பார்த்து அந்த இறைவன்மேல் உண்மையான அன்பைச் செலுத்துபவர்கள், தமது உள்ளமாகிய திருக்கோயிலிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை அறிந்துகொள்வார்கள் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக்கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும்,

  • வரி 2

    தனது பாதங்கள் வலிக்கும் வரை நடந்து தேடினாலும் ஒரு பயனும் இல்லை.

  • வரி 3

    பார்க்கும் அனைத்தையும் இறைவனாகப் பார்த்து அந்த இறைவன்மேல் உண்மையான அன்பைச் செலுத்துபவர்கள்,

  • வரி 4

    தமது உள்ளமாகிய திருக்கோயிலிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை அறிந்துகொள்வார்கள்.

திருமந்திரம் பாடல் #707

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout