தொடர்ந்து படிக்கread this section continuously
மரணஞ் சரைவிடல் வண்பர காயம்இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்அரணன் திருவுரு வாதன்மூ வேழாங்கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.
உரைmeaning
பாடல் #705 இல் கூறியுள்ள ஆறு தகுதிகளுடன், எங்கிருந்தாலும் எப்போதும் அருள் வெளியோடு கலந்திருத்தலும், இந்த உலகத்தில் இருப்பவர்களுக்குப் பலவித நற்செயல்கள் செய்து பெற்ற பலன்களைப் பித்ருக்களுக்குச் சமர்ப்பணமாக அளித்தலும், சிவபெருமானை உணர்ந்து அவனது திருவுருவமாகவே மாறுவதும் ஆகிய தகுதிகளைப் பலவித யோகங்கள் மூலமாகக் கற்று, தமது கையில் இருக்கும் பொருள் போலத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள் என்கிறது பாடல்.
Along with the six qualities named at Padal 705, the verse says that those who learn through various yogas, and come to know as clearly as an object held in the hand, staying always and everywhere joined with the outpouring of grace; offering to the ancestors the merit gained from the many good deeds done for those in this world; and realizing Sivan and coming to take on his very form, these are siddhars.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #705 இல் கூறியுள்ள ஆறு தகுதிகளுடன்,
Along with the six qualities named at Padal 705,
- வரி 2Line 2
எங்கிருந்தாலும் எப்போதும் அருள் வெளியோடு கலந்திருத்தலும்,
staying always and everywhere joined with the outpouring of grace,
- வரி 3Line 3
இந்த உலகத்தில் இருப்பவர்களுக்குப் பலவித நற்செயல்கள் செய்து பெற்ற பலன்களைப் பித்ருக்களுக்குச் சமர்ப்பணமாக அளித்தலும்,
offering to the ancestors the merit gained from the many good deeds done for those in this world,
- வரி 4Line 4
சிவபெருமானை உணர்ந்து அவனது திருவுருவமாகவே மாறுவதும் ஆகிய தகுதிகளைப் பலவித யோகங்கள் மூலமாகக் கற்று, தமது கையில் இருக்கும் பொருள் போலத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள் என்கிறது பாடல்.
and realizing Sivan and coming to take on his very form, learned through various yogas and known as clearly as an object held in the hand, those, the verse says, are siddhars.
திருமந்திரம் பாடல் #706





